“ரூட் மாறுதே…” மத்திய அமைச்சரை பார்க்க டெல்லிக்கு விரையும் அண்ணாமலை…. வெளியான தகவல்….!!
SeithiSolai Tamil March 27, 2025 05:48 AM

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது கூட்டணி பற்றி கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் வருகிற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக பேசப்பட்டது. தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அமைச்சர் அமித்ஷாவை பார்க்க செல்வதால் அதைப் பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.