மேலும் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுமா என கேட்பீர்கள் என்று நினைத்தேன். கோரிக்கை ஏற்படுமானால் திருக்கோயில் சார்பில் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். கோயில்களிலேயே தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் 2 கோயில்களில் இருந்த அன்னதானத் திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப் பசியும் போக்குகிறது திமுக அரசு. மக்கள் அதிகம் கூடும் 17 திருக்கோயில்களுக்கு ரூ.1,716 கோடி செலவில் பெருந்திட்ட வரைவை ஏற்படுத்தியதன் மூலமாக, திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 அன்று குடமுழுக்குக்குப் பிறகு பார்த்தால் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயில் மாறியிருக்கும். பழனி கோயில் திருப்பதிக்கு நிகராக உள்ளது. அந்த அளவுக்கு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.