கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை தொடங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 26,510 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன், கூடுதலாக 1,000 இடங்கள் சேர்த்து மொத்தம் 2,768 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 16ம் தேதி அறிவித்தது.
தற்போது, இட ஒதுக்கீடு வாரியாக 1,000 கூடுதல் இடங்கள் நிரப்பப்பட உள்ளதை குறிப்பிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் தற்போது இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கிவிட்டது என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது
Edited by Siva