28 வயசு தான்... கதறித் துடித்த தாய்... தினமும் 'எனர்ஜி ட்ரிங்க்' குடித்த இளம்பெண் பரிதாபப் பலி!
Dinamaalai March 27, 2025 04:48 PM

 
 கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.  இவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய தாய் லோரி  , “தனது மகள் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர், ஆர்கானிக் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார் .  தினமும் 3 எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கத்தில் இருந்ததாகவும்  கூறினார். எனவே அந்த எனர்ஜி ட்ரிங்க்ஸ் தான் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.

 கேட்டிக்கு அடிக்கடி கடும் பதட்டம் இருந்த நிலையில் அவர் பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வந்ததாகவும்  அவருடைய தாய் கூறினார். அதோடு கேட்டியின் நண்பர்கள் அவர் தினமும் 2 முறை உடற்பயிற்சி செய்யும் நோக்கில் கூடுதலாக சக்தி வழங்கும் சப் பிளிமெண்ட்களையும் எடுத்து வந்ததாகக் கூறியுள்ளனர்.  

இதைத் தொடர்ந்து இவரது இறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள்  எனர்ஜி ட்ரிங்கில் அதிக அளவு கப்ரின், சர்க்கரை, ஜின்சென்ட் போன்ற தூண்டல் சேர்க்கைகள் அடங்கியிருப்பதால்  ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதயத்துடிப்பு குறைபாடுகள் போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடக்கூடும்.  எனவே அடிக்கடி அல்லது அதிகமாக குடிப்பவர்கள் இது போன்ற கடுமையான பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.