குட் நியூஸ்..! கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!
Top Tamil News March 31, 2025 11:48 AM

டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 27ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வீட்டு மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் தடைபடும் அபாயம் நிலவியது.

அவர்களிடம் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபக்கம் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்ததால் வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் திளைத்து வந்தனர். இந்நிலையில், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. இதனை ஏற்று கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.