ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
* ஏப்ரல் 1ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது. 2025-26 நிதி ஆண்டின் முதல் நாளான அன்று முந்தைய நிதியாண்டின் கணக்குகளை முடிக்கும் வகையில் வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 5ம் தேதி பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாளாகும். அன்றைய தினம் தெலுங்கானவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
* ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 14 (திங்கட்கிழமை) அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மிசோரம், மத்திய பிரதேசம், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, டெல்லி, சத்தீஸ்கர், மேகலாயா, இமாச்சல பிரதேசம், அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் தமிழ்நாட்டுக்கும் விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 15 (செவ்வாய்க்கிழமை) பெங்காலி புத்தாண்டு, ஹிமாச்சல் டே, ஆகியவை வருகின்றன. இதனால் அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 16: போக் பிஹு வருகிறது. மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம், மிசோரம் மாநிலங்களில் விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 18 புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு, திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், உத்தர பிரதேசம், கேரளா, நாகலாந்து, டெல்லி, கோவா, பீகார், சண்டிகர், ஜார்கண்ட், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 21: கரியா பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால திரிபுராவில் வங்கிகள் இயங்காது.
* ஏப்ரல் 29 ம் தேதி ஸ்ரீபரசுராம் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. ஹிமாச்சல் பிரேதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 30ம் தேதி கர்நாடகாவில் பசவா ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
இதில் தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் ஏப்ரல் 1, 10 , 14, 18 ஆகிய தினங்களில் விடுமுறையாகும். ஏப்ரல் 1 நிதியாண்டின் முதல் நாள் விடுமுறையாகும். ஏப்ரல் 10ல் மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு + அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் 18 புனித வெள்ளி உள்ளிட்ட தினங்களில் மட்டும் பொது விடுமுறையாகும். மேலும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று மொத்தம் 6நாட்கள் விடுமுறை வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது.