தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தொடங்கிய நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் சிறுபான்மை மக்களை வஞ்சிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்ட திருத்தத்தில் உள்ளது. மேலும் இதன் காரணமாக நாம் அந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.