அதிமுக + பாஜக+ பாமக… “நாங்க கூட்டணிங்க”… ஹிண்ட் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்… அப்போ கன்ஃபார்ம் தானா..?
SeithiSolai Tamil March 27, 2025 04:48 PM

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் கூறி வருகிறார். அந்த வகையில் இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி குறித்த தெரிவிக்கிறேன் என இபிஎஸ் கூறியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தார். இதன் மூலம் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் இன்று ஆர்பி உதயகுமார் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக அமித்ஷா திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டத் தொடருக்கு வருகை புரிந்த திண்டுக்கல் சீனிவாசன் பாமக எம்எல்ஏக்கள் ஜிகே மணி மற்றும் அருள் ஆகியோருடன் பேசிக்கொண்டே வந்தார். அதாவது பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக என சிரித்துக் கொண்டே திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே நடந்து வந்தார். அப்போது செய்தியாளர்கள் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது பற்றி கேட்டனர். அதற்கு அவர் நாங்க கூட்டணிங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மேலும் இதன் மூலம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.