அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், கூட்டணியை அவர் மறுக்காததால் இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தற்போது உள்துறை மந்திரி அமித்சாவை புகழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. அந்த வீடியோவில் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது,
தமிழகத்தின் இரும்பு மனிதராக நிகழும் எடப்பாடி பழனிச்சாமி உலக தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் 8 கோடி மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறு உருவமாக திகழும் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தது இன்று இந்திய நாட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது இன்று தலைப்புச் செய்தியாக இருப்பது ஏன் என்று பார்ப்போம். அதாவது இன்று தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஊழல் போன்றவைகளை பற்றி நேரடியாக முறையிடுவதற்காக தான் அமித்ஷாவை சந்தித்தார் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக அமித்ஷா திகழ்கிறார் என்று ஆர் பி உதயகுமார் புகழாரம் சூட்டியது பேசும் பொருளாக மாறி உள்ளது.