தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, வக்பு சட்டத்திருத்தம் மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ராசா மற்றும் அப்துல்லாவை பேச அனுமதிக்கவில்லை. சட்டப்பேரவையில் ஜனநாயகம் உள்ளது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச அனுமதியுங்கள்.
இங்கே நாங்கள் பேச அனுமதிப்பது போல் எங்களை நீங்கள் பேச அனுமதிப்பதில்லை. அதுதான் வேறுபாடு என சபாநாயகர் அப்பாவுவிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.