அண்ணாமலையாரை திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன்… கோ பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு..!!
SeithiSolai Tamil March 27, 2025 11:48 PM

சிம்பு நடிப்பில் கடந்த 2012ஆம் வருடம் வெளியான படம் போடா போடி. இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் முதல் படமே அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. ஆனால் அவர் பிரபலமான படம் நானும் ரவுடிதான். அதன் பிறகு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கிய அவர் கடைசியாக 2022 ஆம் வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தையும் இயக்கினார்.

இந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி(LIK) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த கோ பூஜையில் கலந்து கொண்டுள்ளார். பின்பு அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.