“என் வாழ்க்கையில் இந்த 2 பேரும் இல்லாமல் நானில்லை” நயன்தாரா போட்ட பதிவு… அந்த 2 பேர் யார்..??
SeithiSolai Tamil March 27, 2025 11:48 PM

தமிழ் சினிமாவின் முன்னை நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் கடைசியாக ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படம் வெளியாகி இருந்தது. அடுத்தது டியர் ஸ்டுடென்ட், டாக்ஸிக், ராக்காயி, விஷ்ணுவர்தன் படம் என அடுத்தடுத்து வெளியாக உள்ளது. நயன்தாரா படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த தொழிலிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. அவ்வப்போது தன்னுடைய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்து அதில், “என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் சேர்ந்து இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.