தாஜ்மஹால் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா. இவர் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன். இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் முயற்சியை கைவிடாமல் சினிமாவில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருந்தார். எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டுமென்ற ஆசையில் பாரதிராஜா, மனிரத்தினம், சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனர் ஆகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மரணம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தம்பி ராமையா மனோஜ் தம்பி இறந்ததற்கு மாரடைப்பு காரணமில்ல அவருடைய இறப்புக்கு காரணம் மன அழுத்தம் தான். ஒரு வெற்றி பெற்ற ஒரு இயக்குனரின் மகன் என்ற மிகப்பெரிய சுமையை சமூகம் அவர் மீது வைத்துள்ளது. அடுத்த படம் எப்பொழுது? பெரிய படம் ஏதும் இல்ல போல இருக்கு? இப்படியான தொடர்ந்த கேள்விகளால் தான் மனோஜ் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருந்தர் . இதுவே அவருக்கு பெரிய சுமையாகி விட்டது. உன்னுடைய அப்பா ஜெயித்துவிட்டார். நீ ஜெயிக்கவில்லை. நீ எப்போது ஜெயிக்கப் போகிறாய்? இது போல் பிள்ளைகள் மீது அந்த சுமையை தூக்கி வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.