தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் சலார், கல்கி படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. பிரபாஸுக்கு 45 வயது ஆகிய இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பாகுபலி படத்தில் நடிக்கும் போது இவருக்கும் அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அதை இருவருமே மறுத்து வந்தார்கள். இந்நிலையில் பிரபாஸ் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் வதந்தியான செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.