பார்த்திபன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 16 படங்களை இயக்கி 14 படங்களை தயாரித்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பார்த்திபன்.
1984 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பார்த்திபன். 1984 முதல் 1991 வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார் பார்த்திபன். 1989 ஆம் ஆண்டு புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் பார்த்திபன். அதை தொடர்ந்து பல நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் பார்த்திபன்.
1990களில் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன் தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்தி பாடுகிறேன், தாவணி கனவுகள், சுயம்வரம், உன்னருகே நானிருந்தால், உன்னை கொடு என்னை தருவேன், வெற்றி கொடி கட்டு, ஆயிரத்தில் ஒருவன், நானும் ரவுடிதான், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவராக இருக்கிறார் பார்த்திபன்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பார்த்திபன் தான் எதற்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் சீதாவின் இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்ப்பதற்கு எனக்கு மனம் வரவில்லை. மேலும் உறவுகள் நிலையானது அல்ல என்பதை நான் ஒரு கட்டத்திற்கு பிறகு புரிந்து கொண்டேன். அதனால் எனது நினைவுகளோடு மட்டுமே பயணிக்க வேண்டும் என முடிவு செய்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பகிர்ந்து இருக்கிறார் பார்த்திபன்.