மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா நடிக்கிறாரா…? குஷ்பூ எடுத்த அதிரடி முடிவு…
Tamil Minutes March 28, 2025 04:48 AM

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வல்லவன், பில்லா, வில்லு, யாரடி நீ மோகினி, இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நயன்தாரா.

2010 காலகட்டத்திற்கு பிறகு நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், நெற்றிக்கண்,கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தையும் பெற்றார் நயன்தாரா. தற்போது பலப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவிருக்கிறார். நயன்தாரா, சுந்தர் சி மற்றும் வேல்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்து ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது நயன்தாரா பற்றிய ஒரு தகவல் வெளியானது. அது என்னவென்றால் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 பட ஷூட்டிங்கில் உதவி இயக்குனரை திட்டி விட்டதாகவும் அதனால் சுந்தர் சி கோபத்தில் படம் எடுக்க முடியாது என்று கூறி சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்து வைத்து விட்டார். ஆனால் அதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை அவருக்கு பதிலாக தமன்னா நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வந்தது. இதற்கு தற்போது குஷ்பூ ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். அது என்னவென்றால் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தமன்னா நடிக்கவில்லை ஏற்கனவே அறிவிப்பு வந்தது போல நயன்தாரா தான் நடித்துக் கொண்டிருக்கிறார். சூட்டிங் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது என்று விளக்கம் அளித்து இருக்கிறார் குஷ்பூ.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.