பிரபலத்திற்கு பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைமை தான்… மனோஜ் இறப்பை பற்றி பேசிய தம்பி ராமையா…
Tamil Minutes March 28, 2025 04:48 AM

தம்பி ராமையா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். தொடக்க காலத்தில் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் பணிபுரிந்து வந்தார் தம்பி ராமையா. 2000 ஆம் ஆண்டு மனுநீதி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் தம்பி ராமையா.

தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்திரலோகத்தில் நான் அழகப்பன் 2018 ஆம் ஆண்டு மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதற்கிடையில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார் தம்பி ராமையா. இவரது நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கவே அதையே தொடர்ந்தார்.

மைனா, கும்கி, வேட்டை, கழுகு, சாட்டை, தாண்டவம், நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, கொம்பன், புலி, வேதாளம், அப்பா, வெற்றிவேல், குற்றம் 23, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வாசம், அடுத்த சாட்டை போன்ற திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் தம்பி ராமையா.

சமீபத்தில் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் காலமானதை பற்றி தம்பிராமையா பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், பிரபலங்களின் பிள்ளைகளாக பிறப்பது கொடுமை. தனது அப்பா சாதித்ததை போலவே பிள்ளைகளும் சாதிக்க வேண்டும் என்ற நம் சமுதாயத்தின் நெருக்கடி அவர்களை சராசரி மனிதனாக வாழ விடாமல் வீட்டுக்குளே முடக்கி மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. அதன் விளைவு தான் மனோஜ் பாரதிராஜாவின் மரணம் என்று பேசி இருக்கிறார் தம்பி ராமையா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.