பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வர எந்த நோயெல்லாம் பறந்து போகும் தெரியுமா ?
Top Tamil News March 28, 2025 09:48 AM

பொதுவாக  சித்த மருத்துவத்தில் அசிடிட்டிக்கு  நல்ல செலவில்லாத தீர்வு .உள்ளது .இந்த தீர்வு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.முதலில் இந்த அசிடிட்டியின்போது குளிர்ந்த பால் ,பெருண்சீரகம் ,அல்லது வெல்லம் அல்லது நெல்லிக்காய் ,புதினா இலைகள் .துளசி இலைகள் ,இஞ்சி போன்றவைகளை எடுத்து கொண்டால் இதிலிருந்து நிவாரணம் பெறலாம் .மேலும் சில டிப்ஸ்களை பின் வருமாறு காணலாம்


2. கொத்தமல்லி கலந்த தண்ணீரை தொடர்ந்து அருந்தி வந்தால் செரிமானம் சீராகி அசிடிட்டி ஓடி விடும்  .
3.உணவு சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமானம் சிறந்த முறையில் இருந்து அசிடிட்டியை அடிச்சி விரட்டலாம் .
4.மதிய வேளையில், பெருஞ்சீரகம், கல் உப்பு கலந்து தயாரித்த தண்ணீரைபருகி வந்தாலும் அசிடிட்டி ஓடி விடும் .
5.முதல் நாள் இரவு உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில்  அருந்தினாலும் அசிடிட்டி துரத்தலாம்
6. வெதுவெதுப்பான பாலை இரவு படுக்க செல்லும் முன் ஒரு தேக்கரண்டி அளவு பசுநெய் கலந்து குடிக்கவும். இது தூக்கமின்மை மற்றும் அசிடிட்டி ,மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும்.
7.பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வரவும். இதன்மூலம், செரிமானம் சீராகி அசிடிட்டி ஓடி விடும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.