விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல் இன்றைய எபிசோடில், பார்வதி மற்றும் மீனா போனில் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாமியார் ஒரு பக்கம், ரோகினி ஒரு பக்கம் என தனித்தனியாக இருக்கிறார்கள். வீடு அமைதியாக இருக்கிறது. “இப்படி வீடு சிதறினால், என்ன ஆகும்,” என்று மீனா கூற, “நீ சொல்வது சரிதான், ஆனால் விஜயா கேட்க மாட்டேன்,” என ஆதங்கத்துடன் பார்வதி பதிலளிக்கிறார்.
இதனை அடுத்து, முத்து மற்றும் மீனா குடும்பச் சூழல் குறித்து விவாதிக்கின்றனர். அப்போது, முத்து, “இந்த பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே ஆள் பாட்டி தான். நான் நேரில் போய் பாட்டியை கூட்டிக்கொண்டு வருகிறேன்’ என்று கூறுகிறார். அதற்கு மீனா, “ஒரு வார்த்தை மாமாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அவர் சம்மதம் சொன்னால் மட்டும் பாட்டியை கூட்டி வாருங்கள்,” என்று சொல்ல, “அதுவும் சரிதான்,” என்று முத்து சம்மதிக்கிறார்.
இந்நிலையில், அதிகமாக மது அருந்திய மனோஜ், நண்பருடன் பைக்கில் செல்லும்போது போலீசார் வழிமறிக்கின்றனர். போலீசிடம் தவறாக நடந்துகொண்ட காரணமாக, மனோஜை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். போதையில் மனோஜ் உளற, கடுப்பாகிய போலீசார், சட்டையை கழற்றி உட்கார வைக்கின்றனர். அதற்கு மனோஜ் “நான் யார் தெரியுமா? என் தம்பி யார் தெரியுமா?” என்று வழக்கம்போல் சண்டை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ரோகினி மற்றும் வித்யா உரையாடுகின்றனர். “மனோஜ்க்கு போன் பண்ணு,” என்று வித்யா சொல்ல, அதற்கு ரோகிணி அவனே பண்ணட்டும் என்று சொல்ல, “உன் மேல் தான் நிறைய தப்பு இருக்கிறது, அதனால் நீயே போன் செய் என்று வித்யா கூறுகிறார்.
அதற்கு ரோகிணி, மனோஜ்க்கும் என் மேல் லவ் இருக்கும். என்னை வெறுக்க மாட்டான். என்மேல் கோபம் இருக்கும். ஆனால், என்னை நிச்சயம் நேசிப்பான். நான் மனோஜுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், மனோஜை எந்த காரணத்திற்காகவும் விட்டுத்தர மாட்டேன்,” என்று ரோகிணீ உறுதியாக கூறுகிறார்.
இந்நிலையில், அண்ணாமலை, தனது குடும்பத்தில் ஏற்பட்ட சோகம் காரணமாக வருத்தத்துடன் இருக்கிறார். முத்து மற்றும் மீனா அவருக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அப்போது, மனோஜின் நண்பர் வந்து, “மனோஜை போலீசார் பிடித்து கொண்டு போய்விட்டார்கள்,” என்று கூற, அதிர்ச்சி அடையும் அண்ணாமலை, “நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்று புலம்புகிறார்.
அவருக்கு ஆறுதல் கூறும் முத்து, “நான் போய் மனோஜை அழைத்து வருகிறேன்,” என்று சொல்ல, “நானும் வருகிறேன்,” என்று அண்ணாமலை கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில்: அண்ணாமலை மற்றும் முத்து காவல் நிலையத்திற்கு செல்ல, மனோஜ் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து, அண்ணாமலை கண்களில் கண்ணீர் வடியும் காட்சிகள் இடம்பெறுகின்றன.