தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது!
Top Tamil News March 28, 2025 11:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று நடக்கிறது!

தமிழக வெற்றி கழகம் துவங்கி ஒரு ஆண்டு கழித்து முதல் பொதுக்குழு கூட்டமானது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இப்பொதுக்குழு நடைபெற்ற  கூட்டத்தில் கடந்த ஓராண்டாக தவெக சார்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணி, போராட்டங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் சட்டமன்றத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளாக பணியாற்றுவதற்கு பொறுப்பாளர்கள் எப்படி பணியாற்ற வேண்டும், அவர்களுக்கான மாநாடு குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்பொதுக்குழு கூட்டத்தில் 2,000 தவெக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.