தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் கவிதை ஒன்றை குறிப்பிட்ட விஜய், அதனை எழுதிய கவிஞரின் பெயரை மாற்றிக் கூறினார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 1,710 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்றனர்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் கவிதை ஒன்றை குறிப்பிட்டார். ஆனால் அதனை எழுதிய கவிஞரின் பெயரை மாற்றிக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. "Men may come and Men may go, But I go on forever" என்ற கவிதை Alfred Lord Tennyson என்பவரால் எழுதப்பட்டது. ஆனால் William Blake என விஜய் மாற்றிக் கூறினார்.