நான் தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்… நடிகை பாவனா ஓபன் டாக்…
Tamil Minutes March 29, 2025 01:48 AM

பாவனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார. இவரது இயற்பெயர் கார்த்திகா மேனன் என்பதாகும். தமிழ், மலையாளம்z கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான பாவனா 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு வெயில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பாவனா. 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக தீபாவளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் பாவனா.

பின்னர் கூடல் நகர், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் போன்ற திரைப்படங்களில் நடித்த பாவனா 2010 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. அது ஏன் என்ற காரணத்தை தற்போது ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் பாவனா.

பாவனா கூறியது என்னவென்றால் எனக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கும் தமிழ் சினிமாவில் கதை கொண்டுவரும் இயக்குனர்களுக்கும் இடையே மீடியேட்டர் சரியாக அமையவில்லை. அதன் காரணத்தால் தான் தமிழ் சினிமாவில் நான் நடிக்கவே இல்லை என்று பகிர்ந்திருக்கிறார் நடிகை பாவனா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.