தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நடிகை நயன்தாரா, நெல்சன் கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில் கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை அவர்கள் புகைப்படத்தோடு வெளியிட்டு உறுதி செய்தார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது கணவரோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வயிற்றில் குழந்தையோடு இருக்கும் சங்கீதாவுக்கு வளைகாப்பு கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram