முதல் நாள் ஷூட்டிங் இப்படி தான் எனக்கு இருக்கும்… ஆனா வெளியே சொல்லமாட்டேன்… மனம் திறந்த மாதவன்…
Tamil Minutes March 29, 2025 04:48 AM

மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார் மாதவன்.

தொடர்ந்து ரன், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆய்த எழுத்து, மின்னலே, லேசா லேசா, பிரியமான தோழி, ஜே ஜே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் மாதவன்.

2010 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வபோது கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார் மாதவன். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாதவன் தனது முதல் நாள் சூட்டிங் எப்படி இருக்கும் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

மாதவன் கூறியது என்னவென்றால் எனக்கு 55 வயது ஆகிவிட்டது. ஆனாலும் என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் எனக்கு பிரசவ வலி போன்று தான் இருக்கும். அன்றைய தினம் நான் மிகவும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ரொம்ப சோர்வு அடைந்து விடுவேன். ஆனால் அந்த பயத்தை நான் எப்போதும் வெளிகாட்டியதே இல்லை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மாதவன்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.