IPL இல் நான் கலந்து கொள்ள போவதில்லை… உருக்கமாக பேசிய RJ பாலாஜி…
Tamil Minutes March 29, 2025 04:48 AM

RJ பாலாஜி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் நடிகர் மற்றும் வானொலி தொகுப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கி ஆகவும் கிரிக்கெட்டை கமென்ட் செய்பவராகவும் பிரபலமாக இருந்தார் RJ பாலாஜி. பிறகு தீயா வேலை செய்யணும் குமாறு என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஹீரோக்களுக்கு நண்பன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரம் என பல திரைப்படங்களில் தோன்றியிருந்தார் RJ பாலாஜி. LKG திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அடுத்து 2021 ஆம் ஆண்டு வீட்ல விசேஷம் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி நடித்து புகழ்பெற்றார் RJ பாலாஜி. இவரது படங்களில் ஆழமான கருத்துக்கள் இருக்கும். அதனால் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்ற பெயர் பெற்றார். தற்போது சூரியன் 45 திரைப்படத்தை இயக்கி வருகிறார் RJ பாலாஜி.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் கிரிக்கெட் கமெண்ட் செய்வதற்காக ரசிகர்கள் RJ பாலாஜியை எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தற்போது நான் இந்த ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ள போவதில்லை சூர்யா 45 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த வருடம் என்னால் ஐபிஎல் இல் கலந்து கொள்ள இயலாது என்று கூறியிருக்கிறார் RJ பாலாஜி.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.