மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஏ.பாறைப்பட்டியில், மதுரை – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மாலை பயணிகள் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், இன்று காலை நெல் நடவு பணிக்காக மதுரை மாவட்டம் அ.பாறைப்பட்டி சென்றனர். வேலை முடிந்த பிறகு, மாலை 4.30 மணியளவில் அவர்கள் வீடு திரும்ப ஷேர் ஆட்டோவில் பயணித்தனர்.
ஆட்டோ அ.பாறைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, சென்னையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற ஒரு கார், அசுர வேகத்தில் வந்துவந்து ஆட்டோவை மோதி கடும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ராமர் (51) (சின்னகிருஷ்ணன் மகன்)
தங்கம்மாள் (47) (ராஜேந்திரன் மனைவி)
அருஞ்சுணை (60) (ராஜேந்திரன், ராமர் மகன்) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த ஐந்து பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து பேரையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.