புதிய வருமானவரி வரம்புகள் இன்று ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி 12 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்தத்தேவையில்லை.
இது தவிர சம்பளதாரர்களுக்கு நிலையான கழிவாக 75 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதால் 12.75 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
வருமான வரி உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டதோடு, வருமான வரம்பு அடுக்குகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.