இன்று இந்தியா வருகிறார் சிலி அதிபர்... பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை!
Dinamaalai April 01, 2025 01:48 PM

தென்அமெரிக்க நாடான சிலியின் புதிய அதிபராக கேப்ரியல் போரிக் பான்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கேப்ரியல், 5 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தர  இருக்கிறார்.

பிரதமர்  மோடி விடுத்த அழைப்பை ஏற்று கேப்ரியல் போரிக் பான்ட் இன்று ஏப்ரல் 1ம்  தேதி இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து  அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அதிபர் போரிக்கின் இந்த பயணம், இருதரப்பு உறவுகள் பற்றிய விரிவான மறுபரிசீலனையை மேற்கொள்வதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.

இந்த பயணத்தின் போது அதிபர் போரிக் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாகவும், அத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் சந்தித்து பேசுவார்" எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.