நடுரோட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டிய திருடனை தைரியமாக எதிர்கொண்ட பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மக்கள் சூழ்ந்திருக்கும் ஒரு கடைப்பகுதியில் திடீரென துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மக்களை மிரட்டிய திருடனை ஒரு பெண் தைரியமாக தனது துப்பாக்கியால் சுட்டு கீழே தள்ளுகிறார்.
அதன்பின் படுகாயம் அடைந்த திருடனை தனது காலால் உதைத்து அவரது துப்பாக்கியை கைப்பற்றுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.