இன்றைய அவசரயுகத்தில் மிக மிக இளம் வயதிலேயே நீண்ட ஆயுளை பெறுவது மிக ரகசியம். கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி என சிலர் கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதில் தான் அந்த ரகசியம் இருப்பதாக நூற்றாண்டு கடந்து வாழும் பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் 100 வயது ஆகவும், மற்றொருவர் 101 வயதாகவும் இருக்கும்.
இந்நிலையில் ” நம்மை நாமே நேசிக்க வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும், மகிழ்ச்சியான சமூக வாழ்க்கையை பேண வேண்டும்” என அறிவுரையாக கூறியுள்ளனர். இதுதான் நீண்ட ஆயுளை பெறுவதற்கான உண்மையான ரகசியம் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரின் கவனத்தைப் பெற்றது. சிலர் இதனை ஆதரித்து வந்த நிலையில், சிலர் “அறிவுரை நடைமுறையில் சாத்தியம் இல்லாதது” என விமர்சித்துள்ளனர்.
அத்துடன் “நீங்கள் யார் என்பதை விட நம்பிக்கை, நிதி சார்பு, மன அழுத்தமின்றி வாழ்வதே முக்கியம்” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இன்னொருவர் “உடற்பயிற்சி தேவையில்லை என்பது தவறான அறிவுரை” எனக் கூறியுள்ளார். வயதானவர்களின் அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் பகிரும். இது போன்ற வீடியோக்கள் எதிர்கால தலைமுறையினருக்கு மிகுந்த ஊக்கமாகவும், வழிகாட்டுதலாகவும் அமையலாம்” என நம்பப்படுகிறது.