நாளை முதல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2005ம் ஆண்டு இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படுகிறது.
அந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்கப்படும். இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்போது சம்பளத்தை அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி தற்போது ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ319 சம்பளம் வழங்கப்படும் நிலையில் ரூ 17 வரையில் உயர்த்தி இனி ரூ 336 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா மாநிலத்தில் அதிகபட்சமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ரூ 400 வரையில் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.