சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடந்த போட்டியில் பெங்களூர் அணியானது வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு சென்னை அணியை பெங்களூர் வீழ்த்தியதால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள். ஒரு பக்கம் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்ததும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. தோனி களமிறங்கும் போது, வெற்றி பெறுவதற்கு 28 பந்துகளில் 98 ரன்கள் தேவைப்பட்டது. 16 பந்துகளில் 30 ரன்களை தோனி எடுத்தாலும், சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது.
பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டத்தை இழந்து அணி தோல்வியை சந்திக்க உள்ள சூழலில், தோனி ஒன்பதாவது ஆளாக களம் இறங்கியது விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பேசியா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் இருக்கக்கூடிய தோனி போன்ற பேட்ஸ்மேன் முன்வரிசையில் ஏன் இறங்க கூடாது. அவரை முன்வரிசையில் இறங்க சொல்ல அணியின் பயிற்சியாளருக்கு தைரியம் இல்லை. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை அப்படியே செயல்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.