போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் நல்ல வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்கள் ஐந்து வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்தால் சிறந்த வட்டி விகிதங்களை பெற முடியும். மேலும் அவர்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு மூத்த குடிமகனும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக 1000 முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது.
இந்த திட்டம் ஐந்து வருடங்களில் முதிர்ச்சி அடைகிறது. 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனியாக SCSS கணக்குகளை திறப்பது மூலமாக அவர்களுடைய முதலீட்டு வரம்பை 60 லட்சமாக இரட்டிப்பாக்கலாம். இது காலாண்டு வட்டியாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 300 கிடைக்கும். அதே நேரத்தில் ஆண்டு அடிப்படையில் வட்டியானது 4,81,200 ஆக இருக்கும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு முதிர்வு தொகையானது மொத்தம் 24 ஆயிரத்து 6 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும்.