ஒரு மனிதன் சோறு உண்ணாமல் ஒரே இடத்தில் 25 மணி நேரம் நின்று கொண்டு பேசிக் கொண்டே இருக்க முடியுமா? அமெரிக்காவில் இந்த அதிசயம் நடந்துள்ளது. அதுவும் பாராளுமன்றத்திற்கு உள்ளே இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடந்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் அரசை கண்டித்து மார்ச் 31ம் தேதி இரவு 7 மணிக்கு பாராளுமன்றத்தில் தனது உரையத் தொடங்கினார் நியூஜெர்ஸி மாநிலத்திலிருந்து அமெரிக்க பாராளுமன்ற செனட் அவை மூத்த உறுப்பினராக உள்ள கோரி புக்கர். ஏப்ரல் இரவு 8 மணி கடந்து 25 மணி நேரம் 5 நிமிடங்கள் தொடர்ந்து பேசியுள்ளார் கோரி புக்கர். இடையில் ஒரிரு டம்ளர் தண்ணீர் மட்டுமே குடித்தார்.
சிறுநீர் கழிப்பத்தற்குக் கூடச் செல்லாமல் உணவு எதுவும் உண்ணாமல் நின்றுகொண்டே பேசிய கோரி புக்கர், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்ந்தாக 2018ம் ஆண்டில் அதிபர் ட்ரம்ப் பிரெட் கவனாக் ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 மணி நேரம் பாராளுமன்றத்தில் உரையாற்றினார் கோரி புக்கர். .
2025 உரையில் டரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் கோரி புக்கர்
இரண்டு உரைகளும் கோரி புக்கரின் துணிச்சலையும், அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க செனட்டர்களில் ஒருவராக அவர் காட்டும் தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
2018 உரை நீதித்துறை விவாதங்களை தீவிரப்படுத்தியது போல, 2025 உரை அரசியல் எதிர்ப்பின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.