பயங்கர நிலநடுக்கம்….! மியான்மரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,643-ஆக உயர்வு…. தொடரும் மீட்பு பணிகள்….!!
SeithiSolai Tamil April 01, 2025 09:48 PM

மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 அளவுடைய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தாக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மண்டலாய் விமான நிலையம் சேதமடைந்ததுடன், சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன.

மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,643ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 700க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 4,575 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 5-வது நாளாக மீட்பு பணி நடைபெறுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.