விருமன் பட விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு பல விஷயங்களை ஆச்சரியத்தோடு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
நான் நாலு தலைமுறையைக் கடந்தவன். சூர்யா, கார்த்தி எல்லாம் சின்னப் பசங்களா இருக்கும்போது எங்க வீட்டுல வந்து விளையாடுவாங்க. அவங்க அப்பா சிவகுமார் ரொம்ப ஒழுக்கமான மனுஷன். கார்த்தி நடிச்ச பருத்தி வீரன் படத்தைப் பார்த்து பிரமிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் இந்தப் படம். என்ன ஆட்டம்? ஆட்டம் மட்டும் அல்ல. நடிப்பில் அவன் கண் பேசுகிறது. மூஞ்சி பேசுது. முடி பேசுது. பருத்தி வீரன் பார்த்தேன். ஷாக் ஆகிட்டேன். அதுக்கு அப்புறம் விருமன் பார்த்தேன்.
இவன் எங்கே போயி நிக்கப் போறான்னு தெரியல. உங்க அண்ணன் சூர்யா நேஷனல் அவார்டு வாங்கிட்டான். நீயும் வாங்குவ. அதுக்கான கதை நிச்சயமா அமையும் என்றார். அதே போல அதிதியைப் பற்றிப் பேசும்போது ஷங்கர் பொண்ணா அது? என்னம்மா ஆடுது அந்தப் பொண்ணு? நிச்சயமா நீ பெரிய அளவில் தமிழ்சினிமாவில் வலம் வருவன்னு வாழ்த்துகிறார் பாரதிராஜா. டாக்டருக்குப் படிச்சிட்டு சினிமாவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே போல இயக்குனர் ஷங்கரைப் பற்றிப் பேசுகையில் நாங்க எல்லாம் மரம், மலை, மேகம், காதல், கிராமம்னு சின்ன பார்வையாகத்தான் இருக்கும். அப்படித்தான் எங்க படங்கள் பேசும். ஆனா ஷங்கருக்கு விசாலமான பார்வை. அவரது படங்கள் பிரம்மாண்டமா இருக்கும். உலகத்தரத்துல இருக்கும் என்கிறார்.
அதே சமயம் சூர்யாவைப் பற்றி பேசும்போது ஒரு சிங்கம். லுக் மட்டும் பயரா இருக்கும். நானும் அவனும் சேர்ந்து மணிரத்னம் படத்துல நடிச்சேன். அதுல ஒரு சீன்ல எப்படியாவது அவனை பாரினுக்கு அனுப்பி விட்டுருவேன். அவன் கண்ணுலயே பேசுவான். நான் போகமாட்டேன்னு சொல்வான். உடனே எங்கிட்ட சொன்னான். ‘அங்கிள் உங்க எக்ஸ்பிரஷன் பிரமாதமா இருக்கு. கீப் இட் அப்’னு.
எனக்கு சொல்லிக் கொடுத்தான். என்னடா டேய்… ஆயிரம் பேருக்கு நான் சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன்னு பாரதிராஜா மேடையில் பேசியதும் சூர்யா வடிவுக்கரசி, வையாபுரி உள்பட பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். பாரதிராஜா அப்படிச் சொன்னதும் சூர்யா முகத்தை வெட்கப்பட்டுப் பொத்திக் கொண்டார். அப்புறம் அப்படின்னா இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும்போலன்னு நான் பயந்துட்டேன் என்றார் சிரித்தபடி பாரதிராஜா.