மேற்குக் கொடுப்பைக்குழி பத்திரமாகாளி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 7 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள மேற்குக் கொடுப்பைக்குழி என்ற சிற்றூரில் அமைத்துள்ளது அருள்மிகு பத்திரமாகாளி அம்மன் திருக்கோவில்.
கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் அருள்மிகு பத்திரமாகாளி அம்மனனுக்கு வருடம் தோறும் பங்குனி மாதம் கடைசி செய்வாய்க்கிழமை வருடாந்திர திருவிழா ஊர் மக்கள் ஒன்று கூடி கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்தவருட பங்குனிமாத வருடாந்திர திருவிழாவானது வருகின்ற ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி திங்கள்கிழமை துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
7 ஆம் தேதி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜா நடைபெறும்.அதனை தொடர்ந்து 6 மணி அளவில் பெண்களின் திருவிளக்கு வழிபாடு, அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற உள்ளது .
இரண்டாம் நாள் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து மதியம் சுமங்கலி பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
மாலை 4 மணியளவில் திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான ஆலன்விளையிலிருந்து மேள தாளங்கள்,வாணவேடிக்கைகள் முழங்காக அம்மன் கும்பத்துடன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு வில்லிசை, நள்ளிரவு மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெறும்.
மூன்றாம் நாள் 9 ஆம் தேதிபுதன்கிழமை காலை வில்லுப்பாட்டு மதியம் அம்மனுக்கு உச்சகொடை மகா தீபாராதனை அதை தொடர்ந்து அனைவருக்கும் சமதர்ம கஞ்சி தர்மம் வழங்கப்படும். மாலையில் பரிவார மூர்த்திகளுக்கு பூஜை நடைபெறும். அப்போது சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
கடைசி நாளான 10ஆம் தேதி வியாழக்கிழமை காலை மாதர்களின் பொங்கல் வழிபாடு நடைபெறும், அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது, விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றார்.