“எங்கள விட்டு போயிட்டிங்களே…” நொடியில் முதியவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
SeithiSolai Tamil March 31, 2025 05:48 AM

சென்னை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பத்மநாபன் இவர் குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஹீட்டர் வேலை செய்யவில்லை. இதனால் பத்மநாபன் மின் பெட்டியில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஈரத்துணியோடு சென்று மின் பெட்டியை தொட்டுள்ளார்.

இதனால் மின்சாரம் பாய்ந்து பத்மநாபன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பத்மநாபனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.