நீலகிரி மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். கூடலூர் கலால் மதுவிலக்கு பிரிவு தாசில்தாராக இருப்பவர் 54 வயதுடைய சித்தராஜ். இவர், கூடலூர் மண்வயல் கோழிகண்டி பகுதியில் நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகள் வாங்க அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக அவர் கூடலூர் மண்வயல் கோழிகண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 42 வயது பெண் ஒருவர், தற்போது முட்டை இல்லை என,கூறியுள்ளார். ஆனால், சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணின், சத்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த தாசில்தார் சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பாக, கூடலூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த்துள்ளார். புகாரின் அடிப்படையில், கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சித்தராஜை கைது செய்துள்ளனர்.