இயக்குநர் - ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜே சித்து; விரைவில் படத்தின் அறிவிப்பு..?
Seithipunal Tamil March 31, 2025 07:48 AM

பிரபலமான தமிழ் யூடியூபர் விஜே சித்துவுக்கு பெரிய நடிகர்கள் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம், அவருடை சேனலில்  விஜே சித்து vlogs. இந்த சேனலில் இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை பெற்று குவிப்பதோடு, அவர்களுடைய காமெடி எல்லோரையும் ரசிக்க வைக்கிறது. இதனால், இவர்களுக்கென தனி ரசிகர்படையே உருவாகியுள்ளது.

இவர்களுடைய காமெடிகள், மற்றும் வீடியோக்கள் பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க விஜே சித்து பல படங்களில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் ஹர்ஷத் கானும், இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களது கதாப்பாத்திரத்தை மக்கள் ஹீரோவை விட அதிகள் கொண்டாடினர் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் விஜே சித்து இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். அதாவது, இவரே படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும், நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் தயாரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.