பிரபாஸின் 'spirit' அப்டேட் கொடுத்த சந்தீப் வங்கா....!!! புது அப்டேட் என்ன தெரியுமா?
Seithipunal Tamil March 31, 2025 07:48 AM

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அவ்வகையில் , 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாகவும், இப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது . இதில் பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .

இப்படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி- சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் மெக்சிகோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: "ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்வையிடவே நான் மெக்சிகோ வந்தேன். தற்போதைக்கு இதுதான் ஸ்பிரிட் படத்துக்கான அப்டேட். நாளை மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்லவிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.