சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டால் சுகர் அளவு உயராது என்பது பற்றி பல மருத்துவர்கள் கூறி உள்ளனர் .அவர்கள் சொன்னதிலிருந்து நாம் சில பழங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஆப்பிள் , பெர்ரி , நாவல்பழம் , செர்ரி , அவகோடா, கிவி,கொய்யா , பேரிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை சுகர் பேஷண்டுகள் எடுத்து கொள்ளலாம்
2.ஒரு நாளைய உணவை ஐந்து பிரிவுகளாக பிரித்து கொள்ள வேண்டும். இதில் ஒன்று அல்லது இரண்டு முறை பழங்களை அதன் தோலுடன் சாப்பிட சுகர் அளவு உயராது
3.பொதுவாக விதை விளைந்து இருப்பது அனைத்தும் பழங்கள் என வகைப்படுத்தினால் தக்காளி , வெள்ளரி கூட இந்த பட்டியலில் வரும்.எனவே இவற்றை கூட அவர்கள் எடுத்து கொள்ளலாம்
4.மாம்பழம் மிகுந்த இனிப்பு உடையது ஆகவே உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் இதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
5.வாழைப்பழத்தில் நரம்புகளுக்கு வலுவூட்டும் சத்துக்கள் இருப்பதால் இதனையும் வாரம் ஒருமுறை உண்ணலாம்.
6.பழம் சாப்பிட்ட சில நிமிடங்களில் நடைப்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபட்டு அந்த ஆற்றலை எரித்து விடசுகர் அளவு உயராது
7.பேரிட்சை மற்றும் தர்பூசணி போன்றவை சர்க்கரை நோயாளிகள் அறவே தவிர்த்தல் அவர்களின் சுகர் அளவு உயராமல் காக்கும் .