பயனர்கள் உற்சாகம்... வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பாடல் !
Dinamaalai March 31, 2025 11:48 AM

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப். வாட்ஸ்ஆப்பின் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதியை, பயனர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரையில், மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாடல் சேர்க்கும் அம்சமாக இருந்தது. இன்ஸ்டாவில் நாம் பாடல் சேர்த்து எடிட் செய்யும் வீடியோவை பதிவிறக்கம் செய்தால், இசையின்றியே பதிவிறக்கம் செய்வது போல் இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் 3ம் நிலை செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால், இன்ஸ்டாவில் எடிட் செய்து பதிவிறக்கம் செய்யும் வீடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்வதில் சிறு சிரமம் இருந்ததாக வாட்ஸ் ஆப் பயனர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், வாட்ஸ் அப்பிலும் இசை சேர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே அளவிலா ஆனந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்களில் 15 விநாடிகளும், வீடியோக்களில் 60 விநாடிகளும் இசை அல்லது பாடலைச் சேர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.