வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!
Top Tamil News March 31, 2025 03:48 PM

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த வெள்ளி கிழமை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,880க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,425 ரூபாய்க்கு விற்பனை
 செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.