இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்து வருகிறார்கள். ஏனெனில் ரயில் பயணம் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். டிக்கெட் செலவு குறைவுதான். இதனால் பேருந்து, விமான போன்றவற்றை விட ரயில்களில் அதிகமாக பயணம் செய்கிறார்கள். ரயில்களில் பயணிக்கும் போது நம்மில் பலரும் இந்த ஒரு பிரச்சனை சந்திப்போம். அதாவது மிடில் பெர்த்தில் தான் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. கீழ் பெர்த்தில் உள்ள பயணிகள் நீண்ட நேரம் வரை இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். இதன் காரணமாக மிடில் பெர்த்திலுள்ள பயணிகள் விரும்பிய நேரத்தில் ஓய்வு எடுக்க முடியாது. நள்ளிரவு வரை கீழ் பெர்த்தில் அமர்ந்திருப்பதால் கீழ் புறத்தில் உள்ளவர்கள் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.
இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்கான விதிமுறையை ரயில்வே கொண்டு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை ஆறு மணி வரை மிடில் பெர்த்தை இறக்கி விட வேண்டும். சில நேரங்களில் டிக்கெட் பரிசோதகர் மிக தாமதமாக வந்து டிக்கெட் கேட்பார். நீங்கள் தூங்கிய பிறகு உங்களை எழுப்பியும் சில நேரங்களில் கேட்பார். இனி அந்த பிரச்சனை இருக்காது. ரயில்வே விதிமுறைப்படி இரவு 10 மணிக்கு பிறகு உங்களிடம் டிக்கெட் கேட்கக்கூடாது. அதற்கு முன்பே டிக்கெட்டை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும். இரவு 10 முதல் காலை 6 மணி வரை நிம்மதியாக தூங்கலாம். ஆனால் 10 மணிக்கு பிறகு ரயிலில் ஏறும் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.