இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கிப்லி ஆர்ட் உருவாக்குவது தற்போது மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கிறது. அதாவது நம்முடைய புகைப்படங்களை அனிமேஷன் ஆர்ட் படம் போன்று இதில் மாற்ற முடியும். இந்த வித்தியாசமான முயற்சி பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் ஏராளமானோர் இதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் சிலர் தங்கள் செல்ல பிராணிகளின் புகைப்படத்தை chatgpt யில் பதிவேற்றம் செய்து இவர்கள் மனிதர்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று கேட்கிறார்கள் அதற்கு chatgpt கருப்பு நிற பூனைகள் மற்றும் நாய்களின் புகைப்படத்தினை வெள்ளை தோற்றம் உள்ள மனிதர்களாக இருக்கும் புகைப்படத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
அந்த வகையில் ஒருவர் “கருப்பு பூனைக்கு வெள்ளை மனித உருவம் எதற்கு? என்றும்,”எவராவது இங்குள்ள பாகுபாட்டை பார்க்கிறீர்களா? என்றும் பதிவிட்டுள்ளார். பெரும்பாலானவர்கள் இதனை நகைச்சுவையாக பார்த்தாலும், சிலர் இதிலுள்ள இன வேறுபாட்டை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது போன்ற போலியான புகைப்படங்கள் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எதிர்கொள்ள போகும் சிக்கல்களின் தொடர்ச்சியாகும்.