வைரல் வீடியோ... அட... தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த பெண்... ரயில் ஓட்டுனர் பிரேக் போட்டதில் இஞ்சினில் சிக்கிக் கொண்ட ஆச்சரியம்!
Dinamaalai April 13, 2025 05:48 AM

 


இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  ஒரு நடுத்தர வயது பெண் தற்கொலை செய்ய முடிவு செய்து ரயிலின் முன் குதித்துவிட்டார். ரயில் ஓட்டுனர் அதனை கவனித்து எச்சரிக்கையாக  ரயிலை நிறுத்திவிட்டார். 

இதனால்  அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார். அதாவது ஒரு ரயில்வே நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய போது திடீரென ஒரு பெண் தண்டவாளத்தில் குதித்து விட்டார்.இதனை கவனித்த ரயிலின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். 

ஆனால் அந்த பெண் ரயிலின் இஞ்சினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். உடனே ரயில்வே போலீசாரும் அந்த பகுதியில் இருந்தவர்களும் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு விட்டனர். அவருக்கு சிறு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. அந்தப் பெண் தற்கொலை செய்யும் நோக்கத்தில் குதித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.