பெற்ற தாயே 7 மாத பெண் குழந்தையை அமானுஷ்ய பூஜையில் நரபலி கொடுத்த கொடூரம்!
Dinamaalai April 13, 2025 05:48 AM

 


 
தெலுங்கானா மாநிலத்தில்   சூரிய பேட்டை   பகுதியில் மேகலப்பதி தண்டா கிராமத்தில் வசித்து வருபவர்  பனோத்து பாரதி . 32 வயதாகும் இவருக்கு  7 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.  ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் குழந்தையின்  மூக்கு பச்சை நிறத்தில் இருந்த காரணத்திற்காக அவரது தாயே அமானுஷ்ய சடங்குகள் செய்து நரபலியாக கொடுத்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


இந்த சம்பவத்தில் தாயே தனது 7 மாத மகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் பின் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் தகுந்த சாட்சிகளும், ஆதாரங்களும் பெறப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்த வழக்கின் சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களை பரிசீலித்த   நீதிபதி  சொந்த மகளைக் கொன்ற குற்றவாளி பாரதிக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.  இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில்  ஏற்கனவே பாரதி தனது கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கடந்த ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.