இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளூர் கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு யுபிஐ ட்ரான்ஸ்பர் செய்பவர்கள், ஆன்லைனில் பில் பேமண்ட் செலுத்துபவர்கள், பணத்தை வேறொருவருக்கு செலுத்த முயற்சிப்பவர்கள் எனப் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர். காரணம் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 66 சதவீதம் பேர் யுபிஐ பேமண்ட் செலுத்த முடியவில்லை என்று நண்பகல் 12 மணியளவில் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேபோல் 34 சதவீதம் பேர் யுபிஐ பணப் பரிமாற்றம் செலுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக NPCI தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. விரைவில் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.