“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!
SeithiSolai Tamil April 13, 2025 05:48 AM

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் முகம்மது அப்பகுதியில் வசித்து வந்த 11 வயது பள்ளி மாணவியிடம் சாதாரணமாக பேசி வந்துள்ளார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தப் பெண்ணுக்கு எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் கலந்த சாக்லேட் கொடுத்து சாப்பிட கூறியிருக்கிறார். அதனை சாப்பிட்ட அந்த பெண்ணும் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட முகம்மது ரபீஸ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்ந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தன் மகளிடம் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்டபோது, அந்த சிறுமி தனக்கு நடந்ததை கூறினார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக முகம்மது ரபிஸ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது ரபீசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.